சர்வதேச யோகா தினம் -  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பங்கேற்பு.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச யோகா தினம் -  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பங்கேற்பு.!!

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒன்பதாவது சர்வதேச யோகா தினம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த யோகா நிகழ்ச்சியில் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு யோகா செய்தார். 

இவருடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதி இரானி, ராஜ்நாத் சிங், அனுராக் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யோகா செய்தனர். இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் யோகா குரு பாபா ரம்தேவ் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் கலந்து கொண்டார். மேலும், ராணுவ வீரர்களும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu governor rn ravi participate yoga function in annamalai university


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->