தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம்.!!
Tamilnadu Govt Announce TNEB President Rajesh Lakkani IAS 16 May 2021
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஜூலை 1, 1957 ஆம் வருடம் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் பொதுத்துறை அமைப்பு ஆகும். இந்த வாரியம் மேலும் செயலாற்றிடவும், மின்உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தைப் பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குவதற்கு ஏதுவாகவும், மத்திய அரசு பிறப்பித்த சட்டத்தின் படி தமிழ்நாடு மின்சார வாரியம் ஜூலை 01, 2010 அன்று முதல் மூன்று அமைப்புகளாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் என்று மூன்று அமைப்புகளாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார உற்பத்தியை பொறுத்த வரையில் அணு மின்சார உற்பத்தி, அனல் மின்சார உற்பத்தி, நீர் மின்சார உற்பத்து, காற்றுச் சுழலி மின்சார உற்பத்தி, சூரிய கதிர் மின்சார உற்பத்தி ஆகிய முறைகளில் மின்சாரம் பெறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் இனி மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Govt Announce TNEB President Rajesh Lakkani IAS 16 May 2021