சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்! காவல் ஆணையருக்கு கெடு! அதிரடியில் இறங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை, ரத்து செய்யக்கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவிற்கு, இன்று பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி, அவரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் வழக்கை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழங்கிய அந்த தீர்ப்பில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் தனக்கு பிரபல அதிகாரமிக்க ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் தெரிவித்திருந்தார். மற்றொரு நீதிபதியான பாலாஜி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து  மூன்றாவது நீதிபதியாக இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி ஆர் மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இந்து விசாரணைக்கு வந்த போது, இன்று பிற்பகலுக்குள் சென்னை மாநகர் மாநகர காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Madras HC savukku shanker case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->