தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu next 4days dry weather
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தின் கேரளாவிலிருந்து வட கர்நாடகாவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலையில் பனிமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu next 4days dry weather