88க்கு பதிலாக 58! தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி நடந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது.

கடந்த ஆறாம் தேதி பிளஸ் டூ முடிவுகள் வெளியான நிலையில், ஒரு மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்களுக்கு பதிலாக மேலே 58 மதிப்பெண் என பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடனம் முடிந்தன. தேர்வில் சுமார் 7,50,000 மேற்பட்ட மாணவ -மாணவிகள் எழுதிய நிலையில், கடந்த மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

மேலும் விடைத்தாள் நகல், மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பிளஸ் டூ பொதுத் தேர்வில் விடைத்தாள் மறு கூட்டலுக்கு பணம் செலுத்தி நகலை பெற்ற மாணவர் ஒருவருக்கு, அந்த விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு, மேலே 58 மதிப்பெண்கள் என்று பதிவு செய்துள்ளார். 

மேலும், விடைத்தாளை திருத்திய அந்த தமிழ் ஆசிரியர் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டதும் தெரியவந்துள்ளது. 

பொதுவாக விடைத்தாளில் மேலே குறிப்பிடப்படும் மதிப்பெண் மட்டுமே பதிவேற்றப்படும் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு 30 மதிப்பெண்கள் குறைந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுபோல் மற்ற மாணவர்களுக்கும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதா என்ற அச்சமும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Plus2 exam Result issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->