தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட்! பொங்கல் அன்றும் 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
Tamilnadu rain alert jan 2025
தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 15ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஜனவரி 18ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் மழை நிலையைப் பொருத்தவரை, இன்றும் மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu rain alert jan 2025