விளையாட்டுத் துறையில் தமிழகம் முதலிடத்தில் வரவேண்டும் - வலியுறுத்திய அமைச்சர் !! - Seithipunal
Seithipunal


விளையாட்டுத் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளைச் சேர்ந்த 410 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும், அதற்காக பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் விளையாட்டு நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களையும் சென்றடைய வேண்டும். இதற்கு இங்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் பயனுள்ளதாக இருக்கும். கிராமப்புற மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனி விளையாட்டு அரங்கம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பார் என தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், திமுக கட்சி வெற்றி பெற்றது குறித்து, 18வது மக்களவை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, ஒவ்வொரு தொகுதியிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.

இந்த விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய லோகோவை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார். தற்போதுள்ள லோகோ கடந்த 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu should be in the first place sports development minister


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->