தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய கொடூர விபத்து! வேதனையுடன் முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


விருதுநகர்: மம்சாபுரத்தில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்தவருக்கு ரூ. 50,000-ம்  நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், தெய்வேந்திரி கிராமம், மம்சாபுரம் முதன்மைச் சாலையில், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இன்று (27.9.2024) காலை 8.00 மணியளவில் சிற்றுந்து ஒன்று எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.

இந்த விபத்தில் திருவில்லிப்புத்தூர் காந்திநகரைச் சேர்ந்த மாடசாமி (வயது 29), வாசுராஜ் (வயது-16), நிதிஷ்குமார் (வயது 17) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் சதிஸ்குமார் (வயது 20) என்ற கல்லூரி மாணவர் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Virudhunagar MiniBus Accident CM MK Stalin order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->