தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடவுள்ளனர் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஜூன் 4ஆம் தேதி 38,500 க்கும் மேற்பட்டோர் வாக்கு என்னும் பணியில் ஈடுபடுவார்கள் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெற்ற முடிந்தது. இதுவரை இந்தியாவில் 6ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

கடைசி கட்ட 7ம் மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில்,நுண் பார்வையாளர்கள் உட்பட 38,500க்கும் மேற்பட்டோர் வாக்கு என்னும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Vote counting 38500 people will be involved


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->