தமிழகத்தின் இரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
Tamilnadu Weather Report and Rain Alert 06072023
மேற்கு திசை காற்றின் வேகம் பாடு வேகம் மாறுபாடு காரணமாக இன்று (06.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்காக வானிலை எச்சரிக்கை :
English Summary
Tamilnadu Weather Report and Rain Alert 06072023