தமிழ்நாட்டு பெண்களே உஷார்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்களை விட பெண்களே அதிகம்! 

உலக அளவில் ரத்த அழுத்தம் நோயால் சுமார் 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 1.6 பில்லியனை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே பன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நோய்களின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தமிழ்நாட்டில் இதனை கட்டுப்படுத்த பொது சுகாதார துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2000 முதல் 2021 ஆம் ஆண்டு வரை உயர் அழுத்த இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. இருப்பவர்களின் காரணத்திற்காக மருத்துவ சான்றிதழ் ஆண்டு அறிக்கையை பயன்படுத்தி 2000 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் வயது மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பகுப்பு ஆய்வு செய்யப்பட்டது. 

இந்த பகுப்பாவின் முடிவில் உயர் ரத்த அழுத்தம் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.2 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் 2020 முதல் 2021 வரை உயர் ரத்த அழுத்தத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவேலையில் நீரிழிவு நோயால் இருப்பவர்களின் என்னைக்கும் 2021 இல் 1.8 சதவீதம் குறைய தொடங்கியுள்ளது. ஆனாலும் உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டோர் பெண்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu women died BP and Diabetics more than men


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->