Fact check: தமிழ்நாட்டில் ரூ.1,130 வரை மின்கட்டண உயர்வா? - TANGEDCO-வின் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. குறைந்தபட்சம் ரூ.55 முதல் அதிகபட்சம் ரூ.1,130 வரை உயர்த்தக்கூடும் என தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த தகவலுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகார பூர்வ எக்ஸ் பக்கத்தில் "கடந்த சில நாட்களாக உலா வரும் மின் கட்டண செய்திகள் பற்றி உண்மை தன்மை: அவை முற்றிலும் பழைய செய்தி. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07/2022 தேதியின்படியான கட்டண விகிதம்" என விளக்கம் அளித்துள்ளது. 

இதன் மூலம் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு என பரப்பப்படும் செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TANGEDCO explain no electric bill hike in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->