பெரிய கோவில் நந்திக்கு 1 டன் காய்கனிகளால் அலங்காரம்.!! - Seithipunal
Seithipunal


தைப்பொங்கல் விழாவையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் அமைந்துள்ள மகா நந்தி சிலைக்கு சுமார் 1000 கிலோ எடையுள்ள காய்கறி, கனி இனிப்பு வகைகள் நேற்று அலங்காரம் செய்யப்பட்டு 108 கோ பூஜை நடைபெற்றது. 

ஞாயிற்றுக்கிழமை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்ற நிலையில் நேற்று காலை உருளைக்கிழங்கு கத்திரிக்காய் முட்டைகோஸ் தர்பூசணி பாகற்காய் கேரட் முள்ளங்கி நெல்லிக்காய் வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும் வாழைப்பழம் ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை கொய்யா அண்ணாச்சி போன்ற பழ வகைகளும் அதிரசம் ஊருக்கு ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு வகைகளும் செம்பருத்தி மல்லிகை போன்ற பூ வகைகளால் அலங்கரிக்கப்பட்டது.

இதன் மொத்த எடை சுமார் ஆயிரம் கிலோ இருக்கும். அதனைத் தொடர்ந்து மகாநந்திக்கு 108 கோ பூஜை நடைபெற்று 108 பசு மாடுகளை கொண்டு வரப்பட்டு அவற்றை சந்தனம் குங்குமம் போட்டு வைத்து மாலையிட்டு பட்டு துணி உடுத்தி வழிபாடு செய்தனர். இந்த விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே உதவி ஆணையர் கவிதா கோவில் செயலர் மாதவன் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tanjore Great Temple was decorated with a ton of vegetables for Nandi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->