இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்திற்கு புதிய தலைவர் நியமனம்.!
tapan sharma appointed new commandar of indian air force tambaram base
இந்திய விமானப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போர் விமானியாக ஏர் கமடோர் தபன் சர்மா பணியில் இணைந்தார். அவர் 'ஏ' தர நிலை கொண்ட விமான பைலட் பயிற்றுவிப்பாளர். அதுமட்டுமல்லாமல் அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி, வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சேவை கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி பெற்றுள்ளார்.
தொடர்ந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான பல்வேறு வகை விமானங்களை 2 ஆயிரத்து 500 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கி சிறந்த அனுபவம் பெற்றவார். தமது 25 ஆண்டு கால அனுபவத்தின்போது அவர் இந்திய விமானப்படையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார்.
இந்திய விமானப்படை விமானப்பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றுக்கு தலைமை வகித்தும் உள்ளார். இந்த நிலையில், ஏர் கமடோர் தபன் சர்மா இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றார்.
ஏற்கனவே இந்தப் பொறுப்பில் இருந்த நிலைய கமாண்டிங் அதிகாரி ஏர் கமடோர் ரதீஷ்குமாரிடமிருந்து அவர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதை முன்னிட்டு அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
English Summary
tapan sharma appointed new commandar of indian air force tambaram base