500 டாஸ்மாக் கடை ஊழியர்களின் கதி என்ன.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சராக செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாத நிலையில் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.

இந்த நிலையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிறுவனம் கடந்த மாதம் தொடங்கியது. பகுதி மற்றும் மண்டல மாரியாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஆய்வு செய்யப்பட்டு மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியல் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று வெளியிட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான அறிவிப்பில் முதல்வரின் உத்தரவின்படி 500 மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் அறிவித்தார். உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து, அவற்றை ஜூன் 22-ம் தேதி (இன்று) முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே  டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் அனைத்து டாஸ்மாக் மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் மண்டல மேலாளர்கள் பரிந்துரைப்படி குறைந்த வருவாய், குறைந்த இடைவெளி, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில், நீதிமன்ற உத்தரவு, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் என 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டது.

இந்த கடைகள் அனைத்தும் ஜூன் 22-ம் தேதி (இன்று) முதல் மூடப்பட வேண்டும். இந்த கடைகளில் பணிபுரிய ஊழியர்களுக்கான மாற்றுப்பணி குறித்தான உத்தரவு விரைவில் வெளியிடப்படும். இந்த கடைகள் மூடப்படுவதால் அங்குள்ள மதுபானங்களை மீண்டும் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். கடைகளில் உள்ள அனைத்து மதுபான வகைகள் இருப்பு, திருப்பி அனுப்பும் அளவு உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட உதவி மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பழைய பில் இயந்திரங்கள், பாட்டில் கூலர்கள் ஆகியவற்றை மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்ற கடைகளுக்கு இவை தேவைப்பட்டால் 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் கடைகளுக்கான வாடகை பாக்கியை முன்பணத்தில் வரவு வைத்து மீதமுள்ள முன்பணத்தை உரிமையாளர்களிடம் இருந்து விரைவாக பெற வேண்டும். சிரமமின்றி கடைகள் மூடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac announced that employees replace in alternative jobs soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->