செந்தில்பாலாஜி வந்த நேரம்! டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்!
TASMAC Billing System started
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த 3 நாளில் அமைச்சராக பொறுப்பற்றுள்ள செந்தில்பாலாஜிக்கு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் அமைச்சர் பணியை நேற்றுமுதல் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு பில் வழங்கும் நடைமுறை. சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர்.
மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
English Summary
TASMAC Billing System started