#BREAKING || பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் சஸ்பெண்ட்!! டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை.!!
Tasmac employees suspended if they charge Rs10 per bottle
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுது வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் அனைத்து மண்டல டாஸ்மாக் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயத்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை ஆவணங்களுடன் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மதுவிலக்குத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள முத்துசாமி தமிழகத்தில் ஒரு சில டாஸ்மாக் கடைகளில் மட்டுமே கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாக மேலாளர் விசாகன் அதிகாரப்பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அண்டை மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு அதற்கு உரிய வகையில் ரசீது வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தற்போது அதிகாரப்பூர்வமாக அனைத்து டாஸ்மாக் மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் வசூலிப்பது நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
English Summary
Tasmac employees suspended if they charge Rs10 per bottle