கள்ளச்சாராய வேட்டை எதிரொலி.. டாஸ்மாக் சரக்கு விற்பனை அதிகரிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக்களை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.130 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகிறது. 70,000 பெட்டி பீர் மற்றும் 1.8 லட்சம் பேட்டி மது வகைகள் விற்பனையான நிலையில் தற்போது வெயில் காலம் என்பதால் 1 லட்சம் பெட்டிகள் பீர் வரை விற்பனையாகி வருகிறது. 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து தற்பொழுது வரை 23 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக கள்ளச்சாராயம் கிடைக்காததால் குடிமகன்கள் டாஸ்மாக் கடையை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். 

குறிப்பாக வட மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி மது விற்பனையை விட 5 முதல் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 48 குவாட்டர் கொண்ட  2 முதல் 5 பெட்டிகள் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac goods sales increase due to counterfeiting hunt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->