மது விற்பனையில் தமிழக அரசு மெகா சாதனை.! மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்.!
tasmac sale report 2021
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக மதுபான விற்பனையை தமிழக அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் (டாஸ்மாக்) தமிழக அரசால் திறக்கப்பட்டது.
இந்த மதுபான கடைகளால் (டாஸ்மாக் ) தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறைகள் மற்றும் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கின.
இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன் பலனாக கடந்த அதிமுக ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதன்படி சுமார் 1000 மதுக்கடைகளை மூடப்பட்டது.
ஆனால், டாஸ்மாக் கடையின் வருமானம் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 21 ஆயிரம் கோடி ரூபாய் மதுபான கடைகள் மூலம் வருவாய் கிடைத்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 19,000 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு ஆண்டில் மதுபான விற்பனை மூலம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு 11% வருவாய் அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.