ஸ்கூட்டரில் வந்து கூலாக மது விற்பனை! அடித்து தூக்கிய விலை! குவிந்த குடிமகன்கள்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மது கடைகளும் இன்று மூடப்படுவதை அறிந்த சிலர் நேற்று மது பாட்டில்களை ஏராளமாக வாங்கி பதுக்கி வைத்து அவற்றை இன்று கள்ள சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 

இதனால் பல இடங்களில் இன்று கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்றது. சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை பகுதியில் டாஸ்மாக் மது கடைகள் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இன்று மூடப்பட்டுள்ளது. 

அப்பகுதியில் மதுபாடல்களை ஒரு நபர் ஸ்கூட்டரில் கொண்டு வந்து சாலையோரம் நிறுத்தி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் இருந்த குடிமகன்கள் உடனடியாக சம்பவ இடத்தில் குவிந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்களை வாங்கி சென்றனர். 

வழக்கமாக ரூ. 140 க்கு விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை அந்த நபர் ரூ. 250 விற்பனை செய்து கொண்டிருந்தார். 

இருப்பினும் குடிமகன்கள் எந்த ஒரு பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்து வாங்கி சென்றனர். 

இதுபோல் சென்னையில் பல இடங்களில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac shops closed liquor sale road side


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->