அந்தரங்க இடங்களில் டாட்டூ போட வரும் பெண்களின் வீடியோ லீக்... சென்னையில் அடுத்த சம்பவம்?..! - Seithipunal
Seithipunal


ஒருகாலத்தில் தங்களுக்கு பிடித்த நடிகர், தெய்வங்கள், மனைவி/கணவன் பெயர்களை அல்லது உருவங்களை பச்சை குத்தும் விஷயங்கள் நடைபெற்று வந்தது. காலங்கள் மாறிக்கொண்டே வர பச்சை குத்தும் விதங்கள் மாறி, பூரான், பல்லி மற்றும் பாம்புகள் என விலங்குகள் உடலில் ஊர்வது போலவும், பல டிசைன்கள் வைத்தும் பச்சை குத்தப்பட்டு வருகிறது. 

தற்போதுள்ள சூழ்நிலையில், தனது காதலன்/காதலியின் பெயரை பச்சை குத்திக்கொண்டு இருந்த நிலையில், மிஷின்கள் மூலமாக டாட்டூ போடும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. மேலும், அந்தரங்க உறுப்புக்கள் முதல் உடல் பாகன்கள் வரை என உடல் முழுவதும் டாட்டூ போடும் கலாச்சாரம் இன்றுள்ள இளம் தலைமுறையிடையே (இரு பாலரும்) அதிகரித்து வருகிறது. 

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியை சார்ந்தவர் ராஜேஷ். இவர் வலிக்காமல் டாட்டூ போடுவதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படும் நிலையில், பெண்கள் டாட்டூ போட வரும் சமயத்தில் அவர்களின் அனுமதியுடன் அல்லது அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்து அதனை யூடியூபில் பதிவு செய்து வருகிறார். 

இந்த விடீயோக்களில் ராஜேஷ் தன்னிடம் டாட்டூ போட வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் வீடியோ பதிவில் பதிவாகியுள்ளது. சில பெண்களின் சம்மதத்துடன் வீடியோ பதிவு செய்யப்பட்டாலும், அவர்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ இடும் வீடியோ காட்சிகள் அப்படியே இடம்பெற்றுள்ளது. 

இதனால் ராஜேஷை கைது செய்ய வேண்டும் அல்லது அவரது யூ டியூப் பக்கத்தை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tattoo You tuber Rajesh Publish girls Private Video on YouTube 25 June 2021


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->