பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் கட்டிய ஆசிரியர் கைது.!! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் கட்டிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாகனேந்தல் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது.. இங்கு மொத்தம் 22 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தனது செல்போனில் ஆபாச படம் காண்பித்துள்ளார். 

இதைபார்த்து பயந்து போன மாணவிகள் சம்பவம் குறித்து தன் பெற்றோருக்குத் தெரிவித்தனர். இதைக்கேட்டு,அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அந்தத் தகவலின் படி போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து, ஆசிரியர் தனபாலிடம் சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்தினர். அதன் பின்னர் போலீசார் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested for showing obscence vedio to students in viruthunagar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->