ரூ.50க்கு ஆசைப்பட்டு ரூ.3,00,000 பறிகொடுத்த ஓட்டுநர்! நூதன முறையில் திருடிய வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஓட்டுனரிடம் நூதன முறையில் 3லட்சம் தேடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வளசரவாக்கம் கைகான்குப்பம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருபவர் பாரதி. ஓட்டுனரான  இவர் தனியார் பள்ளியில் சொந்தமாக வேன் வைத்து ஓடி வருகிறார். இவரை அதேபகுதியில் சொந்தமாக வீடு கட்டி  வருவதாக கூறப்படுகிறது.

கட்டுமான பணிக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது மரம்நபர் ஒருவர் 50 ரூபாய் கீழே விழுந்துள்ளதாக குறி பாரதியின் கவனத்தை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 3 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் இந்த நூதன திருட்டு குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் நடத்தி விசாரணை நூதன திருட்டில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலம் ஒசுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரிய வந்தது.

அதனையடுத்து தனிப் படை போலிசார் ஆந்திராவுக்கு சென்று ராஜசேகரை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்து அவரிடம் இருந்த ரூ. 34 ஆயிரத்தை காவல்துறைய பறிமுதல் செய்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teenager arrested for stealing Rs 3 lakh from driver in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->