சென்னை | முன்னாள் காதலியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது!! - Seithipunal
Seithipunal


புதிய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இளம் பெண் ஒருவர் தன்னுடைய பழைய காதலனுக்கு அனுப்பியதால், ஆத்திரமடைந்த முன்னாள் காதலன், அந்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகர் 5வது தெருவில் உள்ள மாடி வீட்டில் பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். அவர்களோடு அந்த பெண்ணின் தாயாரும் தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அந்த பெண் தனது மூத்த மகளுடன் ஓட்டு வீட்டிலும், அவருடைய இளைய மகள், பாட்டியுடன் அருகில் உள்ள கூரை வீட்டிலும் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

சத்தம் கேட்டு எழுந்த பெண், கூரை வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, வீட்டுக்குள் தூங்கிய தனது இளைய மகள் மற்றும் தாயாரை வெளியே அழைத்து வந்துவிட்டார். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், பாத்திரங்கள், உணவு பொருட்கள், அரசு அடையாள அட்டைகள், கட்டில், பீரோ உள்ளிட்டவை தீக்கிரையாகின.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண்ணின் இளைய மகள், கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த சூர்யா ( 21) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் அறிந்து அவரது தாய் கண்டித்ததால்,  காதலனுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, தனது முன்னாள் காதலி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும், அதில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சூர்யாவை கைது செய்தனர். காவல்துறையிடம் சூர்யா அளித்த வாக்குமூலத்தில் "அந்த பெண் என்னை திடீரென காதலிக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் பள்ளிக்கரணையை சேர்ந்த வேறு ஒருவரை காதலித்து வந்தார். புதிய காதலனுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எனக்கு அனுப்பி வெறுப்பேற்றினார். இதனால் ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கொலை செய்வதற்காக அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினேன்" என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teenager arrested for throwing petrol bomb at exgirlfriends house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->