பள்ளிக்கு சென்ற 13 வயது மாணவி ! வழிமறித்து அந்த இடத்தில் கைவைத்த வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் பபோக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொடுங்கையூர் எழில் நகர் தெருவை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அவர் எம் கே பி நகரில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி நேற்று காலை வழக்கம் போல் முல்லை நகர் வழியாக பள்ளிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியில் வந்த போதை ஆசாமி ஒருவர் சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் சிறுமி அலறி சத்தம் போட்டுள்ளார் .

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் வியாசர்பாடியை பகுதி சேர்ந்த சுந்தர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது போக்ஸோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager who sexually harassed a girl who was going to school was arrested under the pocso Act


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->