பரபரப்பு! எஸ்.ஐயை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிய கைதி! துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் உதவி ஆய்வாளரை  அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடமுயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார். இவர் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி இளையங்குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து வழக்கு பதிவு செய்த சிவகங்கை தாலுகா போலீசார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிவகங்கை அருகே மேலப்பிடாவூரை சேர்ந்த மருதுபாண்டி, சாத்தரசன் கோட்டையை சேர்ந்த அருண்குமார், வைரப்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஸ்வரன், சிவகங்கை எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்த விஷால் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைதான வைரம்பட்டி பகுதியை சேர்ந்த வசந்தகுமார் கொலை செய்ய பயன்படுத்திய வால் மற்றும் கத்தி ஆகியவற்றை புதுப்பட்டி கண்மாய் அருகே கோவில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக விசாரணையில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக வசந்தகுமாரை அழைத்துக்கொண்டு ஐந்து போலீசார் அந்த இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது  கோவில் பகுதியில் மறைத்து வைத்திருந்த அறிவாள்களை வசந்தகுமார் தேடிக் கொண்டிருந்தபோது திடீரென உதவி ஆய்வாளர் பிரதாப்பின் இடது கை தோள்பட்டையில் வெட்டிவிட்டு வசந்தகுமார் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் மணிகண்டன் துப்பாக்கியால் இடது கால் மணிக்கட்டுக்கு கீழே சுட்டதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த வசந்தகுமாரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைதி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென உதவி ஆய்வாளரின் கையில் வெட்டி தப்பி ஓடியதால் ஆய்வாளர் இடது கையில் குற்றவாளியை சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager who was arrested in a murder case tried to run away after killing the Sub inspector


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->