அம்மாவிற்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட மகன்! இன்ஸ்டா காதலி... கடிதத்தில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


பன்னிமடை அருகே வீட்டில் கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

கோவை: பன்னிமடை கணேஷ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ரத்தீஷ் (வயது 22). இவர் அதே பகுதி உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.சேலத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் ரத்தீசுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.

அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்த்து வந்த நிலையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு காதல் விவகாரம் தெரிய வந்து, உடனடியாக அந்த பெண்ணிற்கு உறவுக்கார பையனை பேசி முடித்து திருமணம் செய்து வைத்தனர். 

அந்த திருமணத்துக்கு ரத்தீசும் சென்று காதலியை வாழ்த்திவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் இன்ஸ்டாகிராமில் மீண்டும் ரத்தீசை தொடர்பு கொண்டு, என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்று கதறி அழுதுள்ளார். 

அப்போது ரத்தீஷ், உனக்கு திருமணம் ஆகிவிட்டது, நீ உன் கணவருடன் சேர்ந்து வாழவதுதான் முறை என்று அறிவுரை தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் ரத்தீசை மீண்டும் தொடர்பு கொள்ள வில்லை. 
 
ஒரு வாரத்துக்கு முன்பு சேலம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக ரத்தீசுக்கு 2 நாட்களுக்கு முன்புதான் தெரியவந்ததும், இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த போலீசார், ரத்தீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரித்தீஷ் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ரத்தீஷ் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். 

அந்த கடிதத்தில், "நான் நேசித்த பெண் சேலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது எனக்கு உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா'' என ரித்தீஷ் எழுதியிருந்தார்.

கடிதம் குறித்தும், ரித்திஷ் தற்கொலை குறித்தும் தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager write mother litter committed suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->