விறகு எடுக்கச் சென்றபோது பரிதாபம்.! யானை மிதித்து கோவில் பூசாரி பலி.!
Temple priest dies after being trampled by an elephant in erode
ஈரோடு மாவட்டத்தில் விறகு எடுக்கச் சென்ற போது யானை மிதித்து கோவில் பூசாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனதுறையினர் அடர்ந்த வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதியவர் ஒருவர் யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த இடத்தில் உடனடியாக முதியவரை மீட்டு வனத்துறையினர் தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த முதியவர் பாலப்படுகை கிராமத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி மாதேவன் (66) என்பதும், இவர் விறகு எடுக்கச் சென்ற போது யானை மிதித்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, யானை மிதித்து உயிரிழந்த பூசாரியின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Temple priest dies after being trampled by an elephant in erode