மீட்கப்பட்ட தமிழகக் கோவில் சொத்துகள் விவரம் அடங்கிய புத்தகம் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலை துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்களின் விபரம் அடங்கிய புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்டார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு அதை பெற்றுக்கொண்டார்.

முதன்முதலாக சென்னை வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சொத்துக்கள் 6/06/2021 அன்று மீட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களின் சொத்துக்கள் வெகு விரைவாக மீட்கப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட அனைத்தையும் தொகுத்து அழியாத ஆவணங்களாக அச்சுப் பிரதிகளாக, அனைவரும் அறிந்து கொள்வதற்காக வெளிப்படைத் தன்மையுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது.

இதில் 2021 மே 7 முதல் 2022 மார்ச் 31 வரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவில்களின் சொத்துக்களின் விவரம், திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலம், மனை, கட்டடம், திருக்குளம் விவரங்கள் ஆகியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்க இந்நூல் அடிப்படை ஆதாரமாக விளங்கும்.

மீட்கப்பட்ட சொத்துக்கள் ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு எச்.ஆர்.சி.இ என்ற பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் நடப்பட்டு வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temple property recovered from the occupation Book


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->