நாகப்பட்டினத்தில் பத்து லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்.!  - Seithipunal
Seithipunal


கடலில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் அழிந்துவரும் அரிய வகை உயிரினங்களான கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்களைப் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பிடிப்பவர்கள் அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாகபட்டினம் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக அதிகளவில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகப்பட்டினத்தில் உள்ள கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது ஒரு குடோனில் பெட்டி, பெட்டியாக பதப்படுத்தப்பட்ட பத்து லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, போலீசார் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், நாகையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், அவர் போலீசாரை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து, நாகபட்டின கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை தேடி வருகின்றனர். இதற்கிடையே கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை வனச்சரக அலுவலத்தில், ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten lakhs worth marine cards seized in nagapattinam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->