விடுமுறை எதிரொலி திருச்செந்தூரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
Tens of thousands of devotees flocked to Tiruchendur the echo of the holiday
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகும். இது குருத் தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் போற்றப்படுகிறது.
கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக சத்ரு சம்ஹார பூஜை மற்றும் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறும் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கிறது.
அதேபோல, இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இதை பெறுவதற்காகவும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். திருமணங்களுக்கு இந்த கோவில் மிகவும் புகழ்பெற்றதாகும், சுப முகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடப்பது வழக்கமாகும்.
பரிகார பூஜைகள் மற்றும் திருவிழாக்களுடன் தொடர்புடைய திருவிழாக்களின் நேரங்களில், நவராத்திரி திருவிழாவின்போது திருச்செந்தூர் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் திருச்செந்தூர் சுவாமி தரிசனம் செய்வதற்காக இங்கு வருகை தருகிறார்கள்.
இத்தகைய திருவிழாக்களின் போது பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை சாமி தரிசனம் செய்வதற்காக காத்திருக்கும் நிலை உருவாகிறது. புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களுக்கும் பக்தர்கள் அதிகம் செல்கிறார்கள். இத்தகைய நேரங்களில், ஒரே இடத்தில் முருகப் பெருமானையும், பெருமாளையும் தரிசிக்க சந்தர்ப்பம் கிடைப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.
இன்று விடுமுறை நாளாக இருப்பதாலும், காலாண்டு தேர்வு விடுமுறை காரணமாகவும், அதிகாலையில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
English Summary
Tens of thousands of devotees flocked to Tiruchendur the echo of the holiday