திருமாவளவன் வரவேற்க! வன்னியரசு எதிர்க்க! நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஸ்டாலின்!
Terrorism must be eradicated Thirumavalavan
கோவை கார் வெடிப்பு! பயங்கரவாதம் வேரறுக்கப்படவேண்டும்! - திருமாவளவன்!
கோவை காவடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகளின் சதி திட்டம் இருக்க கூடும் என சந்தேகம் இருந்ததால் பல தரப்பட்ட மக்கள் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்த வேண்டும் எனவேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக தலைமை நிலை செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மாநில உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை முடிவில் கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க ஸ்டாலின் பரிந்துரை செய்தார். மேலும் வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சிறப்பு படையை உருவாக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் கோவை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கரும்புக்கடை சுந்தராபுரம் கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவை சிலிண்டர் வெடிப்பில் இறந்து போன நபரை கடந்த 2019ல் என்.ஐ.ஏ விசாரித்திருக்கிறது. 2022 வரை விசாரணையில் நடந்தது என்ன?அவன் தீவிரவாதி என்றால் முன் கூட்டியே கைது செய்யாதது ஏன்? இப்படி பல சந்தேகங்கள் இருக்கும் போது, மீண்டும் விசாரணையை என்ஐஏ-விடமே ஒப்படைப்பது தமிழ்நாட்டுக்கு ஆபத்து" என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஸ்டாலின் எடுத்த முடிவை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இருக்கலாமெனும் பேரச்சம் எழுந்துள்ள நிலையில் அதனை தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்குப் பரிந்துரைக்க மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்வந்திருப்பதை விசிக வரவேற்கிறது.பயங்கரவாதம் வேரறுக்கப்படவேண்டும்" என வரவேற்றுள்ளார்.
ஒரே கூட்டணி கட்சியை சேர்ந்த இரு தலைவர்களும் ஸ்டாலினின் நடவடிக்கையை வரவேற்றும் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றன. இவர்களுக்கிடையே ஸ்டாலின் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். ஏற்கனவே கட்சி நிர்வாகிகளால் ஸ்டாலின் தூக்கத்தை இழந்துள்ளார். இப்போது கூட்டணி கட்சிகளாலும் தூக்கத்தை இழப்பாரோ என உடன்பிறப்புகள் கவலை அடைந்துள்ளனர்.
English Summary
Terrorism must be eradicated Thirumavalavan