தஞ்சையில் கொடூரம்! சாலையில் நடந்து சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல்! - Seithipunal
Seithipunal


தஞ்சை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், லிப்ட் கொடுப்பது போல் பேசி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் லிப்ட் கொடுப்பது போல் மர்ம நபர்கள் இரண்டு பேர் பேசி உள்ளனர். 

மர்ம நபர்களின் பேச்சை நம்பி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை, அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில் இளம் பெண் ஒருவரை திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற பொறுப்பாளர் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjai poothalur Woman Abused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->