#BREAKING || தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

மேலும் தன மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று, அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி  உத்தரவு பிறப்பித்தது. 

இதனையடுத்து, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், மாணவி தற்கொலை தொடர்பாக அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து (பிப்ரவரி 16 வரை) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு சம்மந்தமாக காவல்துறை பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanjai school girl suicide case inm ariyalore court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->