மதுவில் சயனைடு கலப்பு! இருவரின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் : கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். 

டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே, அருகில் இருந்த டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்த விவேக் (36) மற்றும் குப்புசாமி என்ற முதியவர் உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மதுவில் சைனைடு கலந்ததால் தான் இருவரும் உயிரிழந்து உள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்ததில் சைனைடு கலந்திருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு நபர்களையும் கொலை செய்ய மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது விஷம் குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனத்தை அரசுக்கு தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THANJAI TASMAC DEATH SOME INFO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->