திடீர் திருப்பம்! தஞ்சை பெண் எஸ்ஐ செய்த கொடூர செயல்! அதிரடி நடவடிக்கை எடுத்த டிஐஜி! - Seithipunal
Seithipunal


தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்காத எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை: ஒரத்தநாட்டில் கடந்த 12ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட இளம் பெண்  காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அந்த புகாரை ஏற்காதது தொடரபாக காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவை பணியிடை நீக்கம்‌ செய்து டிஐஜி ஜியா உல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

குற்றமும், பின்னணியும்:

கடந்த 12ஆம் தேதி பாப்பாநாடு பகுதியில் ஒரு இளம் பெண் கூட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் அன்றைய தினமே கைது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த சமபவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு ஒரத்தநாடு நீதிமன்றம் ஒரு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், பாப்பாநாடு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சூர்யா, பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரை ஏற்க  மறுத்துள்ளார். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், புகாரை எடுக்க மறுத்த பெண் ஆய்வாளர் சூர்யாவை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவை பணியிடை நீக்கம்‌ செய்து டிஐஜி ஜியா உல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கூட்டு பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதும், அவர் அளித்த புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjai Young Woman Abused case SI susbanded


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->