முடிவுக்கு வந்த 50 வருட போராட்டம்! மகிழ்ச்சியில் மலை கிராம மக்கள்!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது கல்வராயன் மலை இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் 50 வருட கோரிக்கை நிறைவேறியுள்ளது. காட்டை தங்களின் கடுமையான உழைப்பால்  நிலமாக்கி வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்துவந்த பழங்குடியின மக்களை விவசாயம் செய்யக்கூடாது என சிலர் தடுத்தனர். அதோடு மட்டுமல்லாமல், 

அதோடு மட்டுமல்லாமல், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லவும், சுள்ளி எடுக்கவோ, தேன் எடுக்கவோ காட்டுக்குள்  செல்லக்கூடாது என்று நிறுத்தினர்.   சிறிய செடிகளை பிடுங்கினாலும் பல ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இப்படி தொட்டதற்கேல்லாம் அபராதம் விதிப்பதால் அப்பகுதி மாக்கள் செய்வதறியாது சோகத்தில் இருந்து வந்தனர். 

வனத்துறையின் கெடுபுடி காரணமாக  ஓரிடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்த மக்கள், வசிக்கும் இடத்தை விட்டு கர்நாடகாவின் மைசூர், கேரளாவுக்கு தேயிலை தோட்டத்திற்கும், ரப்பர் தோட்டங்களுக்கும் வேலைக்கு செல்லத் துவங்கினார்கள்.  கடந்த 50 ஆண்டு காலமாக எங்கள் முன்னோர்கள் பயிர் செய்த நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் கோரிக்கை வைத்து வந்தனர். அந்த 50 ஆண்டுகால கோரிக்கை  இப்போது நிறைவேறியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் முதற்கட்டமாக கல்வராயன் மலை மக்கள் 4302 பழங்குடியின மக்களுக்கு நிலங்களுக்கான வன உரிமை சான்றிதழ் வழங்கியுள்ளார்.  நீண்ட கால போராட்டம் முடிவிற்கு வந்ததால் அப்பகுதி மக்கள் மகிச்சியாக உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The 50-year struggle has ended! Hill villagers in joy!!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->