"தற்பெருமை பேசும் திமுக"!...அரசு பள்ளி சமையலறை கதவில் மனித கழிவிற்கு எல்.முருகன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் சத்துணவு தயாரிக்கும் சமையலறை அமைந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள், சமையலறை கதவின் பூட்டு மீது மனிதக் கழிவு வீசி எறியப்பட்டிருந்தது தெரியவந்தது.  

இந்த சம்பவம்  தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மனிதக் கழிவு வீசியவர்களைத் தேடி வருகின்றனர்.  மேலும் இந்த சம்பவத்திற்கு நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் சங்கம்கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பள்ளியில் இரவு நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எருமப்பட்டி பள்ளியைப் போலவே, கடந்த ஆகஸ்ட் மாதம் திருத்தணி மத்தூர் அரசுமேல்நிலைப் பள்ளி கதவில் மனிதக்கழிவு பூசப்பட்டது. அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால், அவை மது அருந்துவோரின் கூடாரமாக மாறி வருகின்றன.

திராவிட மாடல் சாதனை ஆட்சிநடத்துவதாக தற்பெருமை பேசும்திமுகவும், தமிழக முதல்வரும் இதுபோன்ற அவலங்களுக்குஎன்ன பதில் சொல்லப்போகிறார்கள்? இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், உரிய தண்டனை பெற்றுத் தருமாறு வலியுறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boastful DMK L Murugan condemns human waste at the kitchen door of government school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->