பெற்றோர்களே உஷார்! நீச்சல் பயிற்சிக்கு சென்ற மகன்! பிணமாய் வீட்டுக்கு வந்த கொடுமை! - Seithipunal
Seithipunal


சென்னையில் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சிக்கு சென்று நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புயல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார். இவரது மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் 10 வயதில் கீர்த்தி சபரீஸ்கர் என்ற மகன் உள்ளார்.

சிறுவன் கொளத்தூரில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல் நீச்சல் குளத்திற்கு பயிற்சிக்குச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவன் உயிரிழந்த்தை அடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முறையான பயிற்சி அளிக்காமல் பயிற்சியாளர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்ததால் சிறுவன் நீரில் முழுகி பலியானதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இது கொலையா? தற்கொலையா?  என்று தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy drowned while swimming


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->