காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன..அண்ணாமலை காட்டம்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது என்றும் எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பது,
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது என்றும்  அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை ஒட்டுமொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது என்றும்  சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன என்றும் முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது என்றும்  அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்  எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும் தி.மு.க. அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும்  இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The hands of the police are tied. Annamalai Kattam!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->