வாடகை வீட்டை அடமானம் வைத்தால் மோசடி வழக்கு பாயும்; எச்சரிக்கை விடுத்துள்ள டிஜிபி..! - Seithipunal
Seithipunal


வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகை வீட்டை 03-வது நபருக்கு அடமானம் வைப்பது மோசடி குற்றம் என டிஜிபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு வாடகை வீட்டை உரிமையாளருக்கு தெரியாமல் அடமானம்  வைத்தால்  மோசடி வழக்கு பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீடியோவை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விழிப்புணர்வு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  இந்த குற்றங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த டிஜிபி மற்றும் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது. 

சென்னை முகப்பேரில் கனகராஜ் என்பவரின் வீட்டை ராமலிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்துள்ளார். ஆனால் அவர் வீட்டியின் உரிமையாளர் கனகராஜிக்கு தெரியாமல் ராமலிங்கம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The DGP has warned that if a rented house is mortgaged a fraud case will be filed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->