ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா : விடிய விடிய கறி விருந்து! - Seithipunal
Seithipunal


கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு திருவிழா, நத்தம் அருகே கோபால்பட்டியில் நேற்று நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பொழுது விடிய விடிய கறி விருந்து வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம் பகுதியில் உள்ள, கோபால்பட்டியில் சந்தன கருப்பு கோயில் உள்ளது. 

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உற்சாக திருவிழா முப்பது ஆண்டுகள் கழித்து நேற்று (ஜூன் 9) இரவு நடைபெற்றது. இந்த விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் வேண்டுதலை, நிறைவேற்ற நேர்த்திக்கடன்களாக ஆடுகள் பலியிட்டு வழிபட்டனர். திருவிழாவில் பங்கேறே்ற அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவருக்கும், இலை போட்டு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது.

விடியற்காலை வரை நடைபெற்ற இந்த திருவிழாவில் கோபால்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஆண்கள் மட்டுமே கலந்துக் கொண்டு சிறப்பித்த இந்த திருவிழா தற்போது அந்த பகுதியை சுற்றி இருக்கும்  இடங்களில் பேசும் பொருளாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Festival Was Only For Boys


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->