மச்சானை ஓட ஓட விரட்டி அறிவாளால் வெட்டிய மாப்பிள்ளை.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மச்சானை ஓட ஓட விரட்டி மாப்பிள்ளை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் முனியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி கங்காதரன்(30). இவர் தாரமங்கலம் சர்க்கரை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த சந்தானகோபால்(38) என்பவருக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைத்தார்.

ஆனால் சந்தனகோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதையறிந்த கங்காதரன் சந்தானகோபாலை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தனகோபால், கங்காதரனை நேற்று ஓட ஓட விரட்டி அறிவாளால் வெட்டியுள்ளார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த கங்காதரனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தனகோபாலை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The groom chased away the machan and cut him in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->