கொடூரம்! பரோட்டா குருமாவில் அதிக தூக்க மாத்திரை! மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்! - Seithipunal
Seithipunal


தென்காசி அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டத்தால் பரோட்டா குருமாவில் தூக்க மாத்திரை கலந்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்காசி சொர்ணாபுரம் தெருவை சேர்ந்தவர் மஸ்தான். இவர் பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.

இந்தநிலையில், நேற்று காலை மஸ்தான் தென்காசி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் முன்னிலையில் சரணடைந்து தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்  தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது வீட்டில் பாத்திமாவை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஸ்தானை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்.

அதில் பாத்திமாவின் நடத்தையில் நீண்ட நாட்களாக மஸ்தான் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வேறு யாருடனும் அவருக்கு தொடர்பு இருக்கும் என்று எண்ணி உள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடர்பாக கடந்த 1 மாதத்துக்கு முன்பாக மஸ்தான் தனது மனைவி மீது தென்காசி அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் இரண்டு பேரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பாத்திமா தனது நடவடிக்கையை  மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மஸ்தான் தனது மனைவி மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மஸ்தான் தனது மனைவிக்கும் பரோட்டா வாங்கி கொடுத்துள்ளார். அப்போது குருமாவில் தூக்க மாத்திரைகளை அதிக அளவில் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சாப்பிட்டவுடன் பாத்திமா நன்றாக தூங்கி  உள்ளார். நள்ளிரவில் பாத்திமாவின் கை, கால்களில் மஸ்தான் கட்டி சேலையால் தனது மனைவியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

விடியும் வரை மனைவி உடல் அருகில் அமர்ந்துள்ளார். பின்னர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்துள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband who killed his wife by mixing sleeping pills in Parotta Kurma near Tenkasi is in police custody


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->