நள்ளிரவில் மூன்று சிறுவர்கள் செய்த செயல்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு .... நடந்தது என்ன?
The incident someone attacking stone stealing phone
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே இரவில் நடந்து சென்றவரை மூன்று சிறுவர்கள் கல்லால் தாக்கி அவரது செல்போனைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் நேற்று நள்ளிரவு உறவினர்களைப் பார்க்க, காஞ்சிபுரத்தைச் சேர்த்த டேவிட்(50), சாலையில் நடந்து சென்ற பொழுது மூன்று பேர்க் கல்லால் தாக்கிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராவை வைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் டேவிட் என்ற நபரை அடித்து அவரிடம் இருந்த செல்போனைப் பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. அவர் மூவரையும் கிருஷ்ணகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயமடைந்த டேவிட் தற்பொழுது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இரவு நேரத்தில் நடந்து சென்ற நபரைக் கல்லால் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்ற சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
The incident someone attacking stone stealing phone