படம் பிடிக்கலையா? பார்க்காதீங்க! சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை! வெளுத்துவங்கிய உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கேரளாவில் ஒரு சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்து மற்றும் கிறிஸ்தவ இளம் பெண்கள், கல்லூரி படிக்கும் மாணவிகளை நாடக காதல் மூலம் வீழ்த்தி, திருமணம் செய்து, நாடு கடத்தி தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கிறார்கள் என்றும், பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வளர்க்க வேண்டும் என்றும் இந்த திரைப்படத்தின் மைய கருத்து அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ளதாக, இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

தமிழகத்தில் இந்த படம் வெளியாகும் போது, ஒரு திரையரங்கு மீது இஸ்லாமிய அமைப்பு தாக்குதல் நடத்தியது. மேலும், படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடப்போவதில்லை என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

இதற்கிடையே, இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா, அம்மாநிலத்தில் வெளியிட தடை விதிப்பதாக அறிவித்தார்.

இந்த தடையை எதிர்த்தும், தமிழகத்தில் மறைமுகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், "சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில காவல் துறையின் கடமை. படம் பார்க்க செல்வோருக்கு தேவைப்பட்டால் மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மேலும், "ஒரு குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்தீர்களா என்ற ஒரு கேள்வியும், மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியாக எழுப்பியது. 

படத்தைப் பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். அதை விடுத்து அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும்? என்ற கேள்வியும் உச்சநீதிமன்றம் எழுப்பியது.

இறுதியாக, மேற்கு வங்க மாநிலத்தில் கேரளா ஸ்டோரி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the kerala story movie issue sc order tn and wb govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->