இரண்டாவதும் பெண் குழந்தை.. கொடூரமாக கொன்ற தாய்...! ஈரோட்டில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பூனாட்சி நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி சகுந்தலா தேவி (21). இவர்களுக்கு மூன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் சகுந்தலா தேவிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தை பிறந்த ஒன்பதாவது நாளில் பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை திடீரென உயிரிழந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் உள்பக்கம் காயம் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் குழந்தையை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து குழந்தையின் தாயிடம் கிடக்குப்படி விசாரணை நடத்தினர்.

அப்பொழுது விசாரணையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையின் தலையை அமுக்கி கொடூரமாக தாயே கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் குழந்தையை கொன்ற சகுந்தலா தேவியை கைது செய்தனர். பின்பு அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The mother who killed the baby girl in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->