திருச்செந்தூரில் அடுத்த அதிர்ச்சி!...கடலில் குளித்த 2 பெண்களின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், கடலில்  புனித நீராடிய பெண்களுக்கு கால் முறிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  திருச்செந்தூரிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்
திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இருந்த போதிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள்  ஏராளமானவர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடினர்.

அப்போது காரைக்குடியை சேர்ந்த சிவகாமி மற்றும் சென்னையை சேர்ந்த கீர்த்தனா ஆகிய இரண்டு  பெண்களுக்கு கால் முறிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு ணைப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The next shock in tiruchendur what is the condition of the 2 women who bathed in the sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->