பெரும் பரப்பரப்பு! கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராய பலி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சேஷா சமுத்திரம், மாதவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து கள்ளச்சாராயம் குடித்த 229 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாட்டையே உலுக்கியது.

அதில் சிகிச்சை பலனின்றி 67 பேர் உயிரிழந்தனர். மேலும் 161 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அனைவரும் குணவடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் மட்டும் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளச்சாராயம் வழக்கு தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The number of people who died after drinking liquor in Karunapuram area of ​​Kallakurichi district is 68


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->