அன்புநெறி போதித்தவர், ஐயா வைகுண்டர் - அண்ணாமலை - Seithipunal
Seithipunal


பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று சமூக வலைதளத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், " ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளைப் போதித்து, ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் ஐயா வைகுண்டர் அவர்களின் 193 வது  அவதார தினத்தைக் கொண்டாடும் உலகளாவிய பக்தர்கள் அனைவருக்கும் பா.ஜ.க சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்று ஞானத்தைப் போதித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர். உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் வலியுறுத்தி மக்களிடம் சமத்துவம், சமூக நீதி, தர்மம், சுயமரியாதை, அச்சமின்மை போன்ற அறநெறிகளை வளர்த்தவர் ஐயா வைகுண்டர் அவர்கள். அதிகாரத்துவம், கொலை, கொள்ளை, சமூக ஏற்றத்தாழ்வு, பெண்கள், குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில் அய்யா வைகுண்டர் அவர்களின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாக இருக்கிறது.

மேலும் ஐயா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று அவரின் கருத்துக்களைப் பின்பற்றி, அவர் காண விரும்பிய ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம். ஐயா உண்டு! " என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The one who taught the principle of love Sir Vaikundar Annamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->